புனித ஆசிர்வாதப்பரின் ஆன்மீகம்
முன்னுரை:
ஆன்மீகம் என்பது நாம் நமக்குரிய விடையை நாமே கண்டடைந்து அதை நம்முள் நிறைத்துக்கொள்வதாகும். அது பல படிகளிலாக நம்முடைய அகத்தில் நாம் சிறுவயது முதலே பெற்று நிறைத்திருக்கும் ஏராளமான நம்பிக்கைகள் அழிந்து , மனப்பழக்கங்கள் மாற்றம் கொண்டு, நாமே மெல்லமெல்ல மாற்றம் அடைந்து நாம் சென்று சேரும் ஓர் இடம். அந்தப் பயணத்தின் எல்லாப் படிகளும் அந்த வகையில் நம்மை மேலே கொண்டுசெல்லக்கூடியவையே.ஆன்மீகத்தை ஒரு தூய மெய்த்தேடலாக , மத அடையாளம் அற்றதாக, அந்தரங்கமானதாக வைத்துக்கொள்வதே நல்லது. ஆன்மீகதளத்தில் இந்துவோ கிறித்தவனோ அல்லாமல் ஒரு தூய மனிதனாக மட்டுமே இருப்பதே ஒரே வழி. அந்நிலையில் எல்லா மதநூல்களும் எல்லா ஞானங்களும் ஒன்றே.
ஆன்மீகம் ஒரு முழுமை மற்றும் முன்நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pசந-னநவநசஅiநென), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம். எனவே இந்த ஆய்வுக்கட்டுரையில் ஆன்ம{கத்தைப் பற்றியும் புனித. ஆசிர்வாதப்பரின் ஆன்ம{கம் மற்றும் இவர்களின் ஆன்ம{க பங்களிப்பு பற்றியும் கூறியுள்ளேன்.எனக்கு கிடைக்கப்பட்ட சில தரகுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வுக் கட்டுரையானது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒருசில வார்த்தைகள் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அலகு : 1
ஆன்மீகம் என்பது என்ன?
'ஆன்மீகம்' முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.
மனிதனை விடுதலை அடைந்தவனாக, முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம்.
ஆன்மீகம் என்பது ஒரு நிறைவின்மையை ஒருவர் உணர்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. 'எனக்கு இந்த வாழ்க்கை போதவில்லை, நான் முழுமையான வாழ்க்கையைத் தேடுகிறேன்' என ஒருவர் எண்ணும்போது 'எனக்கு அனுபவம் மட்டும் போதாது அனுபவத்தை அறிவதும் வேண்டும்' என ஒருவர் உணரும்போது அந்த நிறைவின்மை ஆரம்பிக்கிறது. அது வினாக்களாகிறது, தேடலாகிறது. ஆன்மீகத்தேடல் என்பது எல்லா திசைகளுக்கும் விரியக்கூடியதாகவே இருந்தாகவேண்டும். அதற்கு முன் நிபந்தனைகள் இருக்கக் கூடாது. முன்மாதிரிகள் இருக்கலாகாது. முன்பயிற்சி இருக்கக் கூடாது. ஆன்மீகத்தேடலில் அமைதி உள்ளது. 'நான் எனக்குரியதைச் செய்கிறேன்' என உணரும்போது ஏற்படும் அகநிறைவு.
ஆன்மீகம், கடவுள், மதம் மூன்றையும் நாம் ஒன்றாகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆன்மீகம் என்பது நம் வாழ்க்கையை, மானுட வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் அறிவதற்கான ஒரு மானுடமுயற்சி. முழுமைநோக்கு அல்லது சாராம்சநோக்கு என அதை விளக்கலாம்.
இந்திய மதங்களில் 'இதம்' என்ற சொல் முக்கியமானது. 'இது' என அச்சொல்லுக்கு அர்த்தம். இதெல்லாம் என்ன, இதெல்லாம் ஏன், இதெல்லாம் எவ்வாறு என்ற வினாக்களுக்கான பதில்தேடலே ஆன்மீகம்.
அலகு : 2
பல்வேறு சமயங்களின் கடவுள் கோட்பாடு
கடவுள் என்பது அந்தத் தேடலில் நம் முன்னோரால் கண்டடையப்பட்டு நமக்களிப்பட்டுள்ள ஒரு பதில் மட்டுமே. அந்தப் பதிலானது கடவுள் என ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் உண்மையில் அது பலவகையாக விளக்கப்படுவது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் 'இந்த உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய ஓர் ஆளுமை அல்லது இருப்பு'. இஸ்லாமுக்கும் அப்படித்தான்.
இந்து மரபின் அடிப்படையாக உள்ள கடவுள் உருவகம் பிரம்மம். பிரம்மம் என்றால் இந்த முடிவற்ற பிரபஞ்சத்துக்கு எது மூலகாரணமாக உள்ளதோ அது. இந்தப் பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. அந்த மூலகாரணம் எப்படிப்பட்டது என்று அறியவோ விளக்கவோ முடியாது.
ஆனால் இப்பிரபஞ்சம் அந்த மூலகாரணத்தின் இன்னொரு வடிவம் என்பதனால் இதில் உள்ள எல்லாமே அதுதான்.இவ்வாறு இந்து மரபு பல்வேறு கடவுள்களை உருவகித்துக்கொண்டது. எங்கெல்லாம் நம்மை நம் அன்றாடப் பார்வைக்கு அப்பால் பார்க்கச்செய்யும் ஒரு பிரம்மாண்டம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கடவுளைக் கண்டது.
பௌத்தம் கடவுள் என்றால் பிரபஞ்சத்தை இயக்கும் முழுமுதல் நெறி அல்லது விதி என்று உருவகித்து அதை மகாதர்மம் என்ற சொல்லால் குறிப்பிட்டது.அதன் வடிவமாக புத்தரின் உடலை பிற்காலத்தில் உருவகித்துக்கொண்டார்கள்.
கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக அமைப்புதான். பிறப்பது முதல் இறப்பது வரையிலான சடங்குகளின் தொகை அது. ஒரு மக்கள்கூட்டத்தை இணைத்துக்கட்டும் நம்பிக்கை.
2.1 கடவுள் தேவைக்கான காரணங்கள்:
1. நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் முன்பின் தொடர்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிறப்பு இறப்பு நோய் இழப்பு மகிழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஓட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே நமக்கு ஒரு பதற்றம் ஏற்படுகிறது
கடவுள் என்ற உருவகம் இதைப்பற்றிய பதற்றத்தை தீர்க்க உதவுகிறது. வாழ்க்கையை கடவுளை வைத்து எளிமையாக வகுத்துக்கொள்ளமுடியும். கடவுள் என்பது எளிமையான திட்டவட்டமான விடை. மானுட வாழ்க்கையில் நம்பிக்கையையும் பிடிப்பையும் அந்த உருவகம் அளிக்கிறது
2. மனிதன் அன்பு,பாசம், கருணை, தியாகம், ஒழுக்கம் போன்ற பல நற்பண்புகளையும் பல்வேறு அறங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். இந்தப் பண்புகளும் அறங்களும் சீரான சமூகச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. கடவுள் என்ற உருவகம் இந்த எல்லா நற்பண்புகளையும் அறங்களையும் தொகுத்துக்கொண்ட ஒரு வடிவமாக உள்ளது. 'அன்பே சிவம்' 'ஏசு அன்பாக இருக்கிறார்' போன்ற வரிகள் இதையே குறிக்கின்றன
இந்தப் பண்புகளையும் அறங்களையும் நம் மனத்திலும் சமூக மனதிலும் நிலைநாட்ட கடவுள் என்ற உருவகம் உதவுகிறது. கடவுள் பக்தி என்பது சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த அறங்கள் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கை என்றுதான் அர்த்தம் கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்
3. மனிதனுக்கு இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு தனிமை உணர்ச்சி உள்ளது. ஆகவே அவனுக்கு தலைக்குமேலே அவனை பார்க்கக்கூடிய அவனைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தந்தை, அல்லது எஜமான், அல்லது அரசன் அல்லது அளவிடமுடியாத ஆற்றல் தேவையாகிறது. அதாவது மனிதனுக்கு வேண்டிக்கொள்ளவும் மன்றாடவும் புகார்செய்யவும் ஒரு இடம் தேவை. கடவுள் அந்த இடம்.
2.2 கிறிஸ்தவ ஆன்மீகம்:
ஆன்மீகம் என்னும் சொல் பலவிதமான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப்பல்வேறு வரையறைகள் வழங்கப்படுகின்றன. நம்மைப் பொறுத்தவரை, இறையுறவின்வெளிப்பாடே ஆன்மீகம் என்று சுருங்கச் சொல்லலாம். இறைவனோடு ஒருவர் கொள்ளும்தனிப்பட்ட உறவு என்னும் அனுபவத்தை அவர் எப்படி வெளிப்படுத்துகிறாரோ அதுவே அவரது ஆன்மீகம் என்பது அதன் விளக்கம்.ஆன்மீகம் என்பது தனி நபர்களுக்கும் உரியது, குழுக்களுக்கும் உரியது. துறவிகளின் ஆன்மீகம், மறைமாவட்டக் குருக்களின் ஆன்மீகம், ஆசிரியர்களின் ஆன்மீகம் என்று பல பார்வைகளில் இது பரிமாணம் எடுக்கிறது.
2.3 கிறித்தவ துறவிகள்:
கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, க{ழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.
ஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார். இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.
அலகு : 3
புனித ஆசிர்வாதப்பரின் ஆன்மீகம்
3.1 வாழ்க்கை வரலாறு:
கி.பி. 480ஆம் ஆண்டு: மரபுப்படி, இந்த ஆண்டில் நர்சியா(ரேசளயை) என்ற இடத்தில் புனித ஆசிர்வாதப்பர் என்று அழைக்கப்படும் பெனதிக்து பிறந்தார். இவர் மேற்கு கிறித்தவ வரலாற்றில் துறவியர் இல்லங்கள் உருவாக அடித்தளம் இட்டார். துறவியர் வாழ்க்கைமுறை ஒழுங்குகள் வகுத்தார். இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்தார்;. உரோமை நகர் சென்று கல்வி கற்றார். இளையோரிடம் காணப்பட்ட த{மையை கண்டு தம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். ஒரு மலை உச்சிக்கு தனியாக சென்றார். அங்கே எர்மானுஸ் என்ற முனிவரை சந்தித்தார். இவர் காட்டிய வழியில் 3 ஆண்டுகள் தாமும் மனிவராக வாழ்ந்து வந்தார். இவரது வாழ்க்கையால் பலர் ஈர்க்கப்பட்டனர். இதன்விளைவாகத் தோன்றியது தான் ' பெனடிக்ட்(ஆசிர்வாதப்பர்) துறவற சபை'.
12 ஆம் பத்திநாதர் இவருக்கு 'ஜரோப்பாவின் தந்தை' என்று பட்டம் சூட்டினார். கி;.பி 1964 இல் திருத்தந்தை 6-ஆம் சின்னப்பர் இவருக்கு 'ஜரோப்பிய நாடுகளின் சிறப்பு பாதுகாவலர் என அறிவித்தார்.
3.2 ஆன்மீகம:;
கடவுள் நம்மை மேலிருந்து பார்து;துக்கொண்டிருக்கிறார். காவல்தூதர்கள் நம்;மை வழிநடத்துகிறார்கள் என்பது இவரது நம்பிக்கை. கிறிஸ்து கடவுளுக்கு சமமானவர். இவர் கிறிஸ்துவை அப்பாவாகவும், நல்ல ஆயனாகவும், கடவுளாகவும் பார்க்கிறார். கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார். கடவுளின் திட்டம்; மடாதிபதியின் மூலம் நிறைவேற்றப்படுவதாக நம்பினார். நமது நன்மைத்தனத்தை கடவுளுக்கு அர்பணிக்க வேண்டும் என வழியுறுத்தினார். பல துறவற சபைகளுக்கு வித்திட்ட இவர் மார்ச் 21, 547 இல் மான்டே கேசினோவில் இறந்தார்.
இவர்காலத்தில் பொதுவாக மேலை நாடுகளில் மனித மாண்பும், மனித உழைப்பும் குறைந்து அவை அடிமைகளால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற தவறான புரிதல் இருந்தது.இதை கண்டிக்கும் வகையில் மான்றே கசினோ எனற இடத்தில் துறவு சபையை ஏற்படுத்தும் போதே ' ழுசுயு நுவு டுயுடீழுசுயு' என்ற சட்டத்தை இவர் ஏற்படுத்தினார். ஜெபமும் உழைப்பும் என்பதே அதன் பொருள். இதுவே இச்சபையிக் குறிக்கோள்.
3.3 ஆழ்மனத் தியான வாசிப்பு: (
டுநஉவழை னiஎiயெ என்பது இலத்தின் மூலத்திலிருந்து பெறப்பட்டது. இது கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி விவிலியத்தை வாசிக்கவும், தியானிக்கவும், அதை செபிக்கவும் உறுதுணை புரிந்தன. இது இறைவன் ம{து உள்ள உறவை புதுப்பிக்கவும், அவரைப் பற்றிய அறிவை ஆழப்படுத்தவும் உதவின. வுpவிலியம் என்பது வெறும் வார்த்தையல்ல மாறாக உயிருள்ள வாழும் வார்த்தை என்ற புரிதலை மக்களிடம் ஏற்படுத்தியது. இது நான்கு நிலைகளை உள்ளடக்கியது 1) வாசித்தல் 2) தியானித்தல் 3) செபித்தல் 4) ஆழ்ந்து தியானித்தல் என்ற படி நிலைகளை உள்ளடக்கியது. இதன் நோக்கம் விவிலியத்தை இறையியல் பகுப்பாய்வு கண்ணோட்டமாக மட்டும் பார்க்காமல் , கிறிஸ்துவே அதன் அடிப்படை அர்த்தமாகவும் உள்ளார் என்ற மறையுண்மையை புரிந்து கொள்ளவும் உதவிபுரிந்தன.
6 ஆம் நூற்றாண்டில் புனித. பெனடிக்ட் என்ற துறவியால் நிறுவப்பட்டு, 20-ம் நூற்றாண்டில் இன்றைய உலகில் திருச்சபை என்ற 2-ம் வத்திக்கான் சங்க மடலில் திருத்தந்தை. 6-ம் பவுல் பொதுமக்களும் இதை வலியுறுத்தினார். 21-ம் நூற்றாண்டில் திருத்தந்தை. 16-ம் பெனடிக்ட் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
3.4 நான்கு படி நிலைகள்:
இது மடாலயங்களில் ஒரு குழு பயிற்ச்சியாக மட்டுமே பின்பற்றி வரப்பட்டது. இது வார்த்தைக் கொண்டாட்டம்(கநயளவiபெ ழக வாந றழசன) என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட்டது. எவ்வாறு உணவை உண்கிறோமோ அதுபோல முதலில் இறைவார்த்தையை நாம் உண்ண( படிக்க) வேண்டும். பிறகு நம் மனதில் அவ்வார்த்தைகளை அசை(அநனவையவந) போட வேண்டும். இவற்றை வாழ்வாக்கி அதன் மூலம் கிறிஸ்துவை அறிய க{ழ் காணும் நான்கு படி நிலைகள் அவசியம்.
3.4.1 வாசித்தல்:
முதல் நிலை இறை வார்த்தையை வாசித்தல். இது இறை வார்த்தைக்குள் செல்ல நமது மனதையும் எண்ணத்தையும் பக்குவப்படுத்தி அமைதி நிலையை ஏற்படுத்துவது. ' அமைதி கொண்டு நானே கடவுள் என அறிந்து கொள்ளுங்கள்' ( தி.பா46:10) என்று தருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார்;. இறைவார்த்தையை வாசிக்க தூய ஆவியின் ஆற்றல் வேண்டும். ' கடவுள் தூயஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார். கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகின்றார்'. (1 கொரி 2:10) இறைவார்த்தையை மெதுவாக திரும்ப திரும்ப வாசிப்பதன் மூலம் இறைவனை நாம் அறிய முடியும்.எனவே பெனடிக்ட் சபை துறவிகள் ஒரு வசனத்தை நான்கு முறை வாசித்தனர். ஓவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் வாசித்தனர்.
3.4.2 தியானித்தல்:
இறைவார்த்தையை தியானிப்பதன் மூலம் தூய ஆவி வெளிப்படுத்தும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்வது இரண்டாம் நிலை. இதன்மூலம் விவிலியத்தை அறிவு வளர்ச்சிக்காக படிக்கும் பிற நூல்களைப்போல் இல்லாமல் அதனை வாசிப்பவர்களை மறு விவிலியமாக மாற்ற உதவியது.
3.4.3 செபித்தல்:
செபம் என்பது மனிதர் இறைவனோடு கொள்ளும் ஒரு உரையாடல். புனித. அம்புரோஸ் ' நாம் செபிக்கும் போது இறைவனிடம் பேசுகிறோம், இறை வார்த்தையை வாசிக்கும் போது அவரது துரலுக்கு செவிமடுக்கிறோம்' என்று கூறுகிறார். இறைவார்த்தையை வாசித்து தியானிப்பதோடு மட்டும் நின்று விட்மல் அது செபமாக மாற வேண்டும்.
3.4.4 ஆழ்மன தியானம்:
நாம் வாசித்து, தியானித்து, செபித்த விவிலியமானது நம் வாழ்வோடு ஒன்றிணைக்கபட்டு நம்மை ஒரு வாழும் விவிலியமாக மாறி நமக்குள் இருக்கும் இறைவனை கண்டறிய வேண்டும். ஆழ்மன தியானம் என்பது முழு ஈடுபாட்டுடன் கடவுளின் வார்த்தைக்கு செவிமடுப்பது என்று கத்தோலிக்க மறை போதனை (32) கூறுகிறது.
3.5 வரலரற்றுப் பிண்ணணி மற்றும் வளர்ச்சி:
3-ம் நூற்றாண்டில் ஒரிஜின் என்பவர் விவிலியத்தை ஒரு அருட்சாதனமாக பார்த்தார். இவர் கிரகோரிக்கு எழுதிய மடலில் ' எப்பொழுதெல்லாம் ந{ இறை வார்த்தையை படிக்கிறாயோ அப்பொழுதெல்லாம் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களையும், பலருக்கும் வெளிப்படாதவாறு மறைந்துள்ள மறை உண்மைகளையும் உணர்ந்து படிக்க வேண்டும்.' என்று கூறுகின்றார்; வார்த்தையானது விவிலியத்தில் மனுவுருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது நமது அடிப்படை எண்ணத்தை மாற்றி விவிலியத்தில் மறைந்துள்ள உயரிய ஞானத்தை கண்டடைய வழிவகுக்கும் என்று ஒரிஜின் கூறுகிறார.; கிறிஸ்துவே விவிலியத்தின் அடிப்படை. வுpவிலியம் கிறிஸ்துவே வெளிப்படுத்தும் ஒரு இறை வார்த்தை வெளிப்பாடு.
இந்த முறையை 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிலான் நகர் அம்புரோஸ் கற்றுக்கொண்டு, புனித. அகுஸ்தினாருக்கு கற்றுக்கொடுத்தார். அதன்பின் மேற்கத்திய மடாலயங்ளில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறவிகள் கடவுளைத்தேடி பாலஸ்த{ன, எகிப்து பாலைவனத்திற்க்குச் சென்று தொடர் செபத்தில் ஈடுபட்டனர். பாலைவனத் தந்தையர்கள் என அழைக்கப்படும் இவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி விவிலியத்தை வாசித்து பின் தனிமையில் அதனை தியானித்தனர்.
அலகு : 4
சபை ஒழங்குகள்
இச்சபையில் குடும்ப உணர்வு காணப்பட்டது. தலைமைத் துறவி இக்குடும்பத்தின் தந்தையாகவும் மற்ற துறவிகள் உடன் பிறந்த சகோதரர்களாகவும் கருதப்பட்டனர். இக்குடும்ப ஒற்றுமைக்கு காரணம் இச்சபை ஒழுங்குகள். இவை 73 அலகுகளாகப் பிரி;க்கப்பட்டுள்ளது.அவைகளாவன
அலகு 5: ஒவ்வொரு துறவியும் தன்னுடைய தலைமை துறவிக்கு க{ழ்படிந்து நடக்கவேண்டும்.
அலகு 6: துறவிகளுக்கு நாவடக்கம் வேண்டும். தேவையற்றதை பேசக்கூடாது .
அலகு 7: கடவுளை அடைவதற்கான 12 தாழ்ச்சி நிலைகள் 1) தெய்வ பயம் 2) முழுமையான அர்ப்பணம் 3) க{ழ்படிதல் 4) பொறுமை 5) பாவமன்னிப்பு 6) கடவுள் முன் தகுதியற்றவர்களாக கருதுதல் 7) தாழ்ச்சி 8) ஞானமேய்யர்களின் வழி நடப்பது 9) பேசாதே 10) சிரிக்காதே 11) எளிமையான பேச்சு 12) தோற்றத்தில் எளிமை.
அலகு 8-19: ஒரு நாளைக்கு 8 மணி நேரம் திருப்புகள் மாலை வாசிக்க வேண்டும்.
அலகு 19:கடவுளுக்கு மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டும்.
அலகு 20:வெறும் வார்த்தைகளால் அல்ல மனதளவில் செபிக்க வேண்டும்.
அலகு 21: ஒவ்வொறு பத்து துறவிகளுக்கு ஒரு ஒருங்கினைப்பாளர் தேவை.
அலகு 22: ஒவ்வொறுவறுக்கும் ஒரு தனி அறை. அதிகாலை செபத்திற்கு(எபைடை) அவர்களே எழும்பி வர வேண்டும். இரவு முழுவதும் அறையில் விளக்குகள் எரிய வேண்டும்.
அலகு 23-29: க{ழ்படியாமை, பொறாமை போன்ற குற்றங்களுக்கு தண்டனையாக குற்றம் செய்தவர் தன் தவறை உணர்வதற்காக முதலில் அறிவுரை கூற வேண்டும், பின் அவர் தனிமையில் உணவருந்த வேண்டும், பிறகு அவரை சபையை விட்டு ந{க்க வேண்டும்.
அலகு 30:வெளியேற்றப்பட்ட துறவிகளை மூன்று முறைக்கு மேல் மடத்தில் சேர்த்துக்கொள்ள கூடாது.
அலகு 31-32: நிர்வாகத்தில்லுள்ள துறவிகள் தங்கள் மடத்திலுள்ள உடைமைகளை கருத்தாய் பாதுகாக்க வேண்டும்.
அலகு 33: தனக்கென சொத்துக்களை யாரும் சேர்த்து வைக்க கூடாது.அவர்களின் தேவைகளை மடாதிபதி நிறைவேற்ற வேண்டும்.
அலகு 33: அனைவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அலகு 35:அனைத்து துறவிகளும் சமையலறை பணிகளில் ஈடுபட வேண்டும்.
அலகு 36-37:உடல்நலமற்ற துறவிகளை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும். வழக்கமான உணவுப் பழக்கத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
அலகு 38: உணவு உட்கொள்ளப்படும் போது இறைவார்த்தை வாசிக்கப் பட வேண்டும்;.
அலகு 39-40: உணவின் தரமும் அளவும் சரியாக இருக்க வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு நேரம் மட்டுமே உணவு உட்கொள்ளப்பட வேண்டும். நோயாளர்கள், வலிமைக்குன்றியவர்களைத் தவரிமற்ற யாரும்; இறைச்சி உண்ணக்கூடாது.
அலகு 41: உணவு நேரத்திற்க்கான காலஅட்டவணை வருடம்தோறும் மாற்றப்பட வேண்டும்.
அலகு 42: நமக்கு இறைஞானத்தை தூண்டும் நூல்களை மாலைநேரங்களில் வாசிக்க வேண்டும். மாலை நேரங்களில் அமைதிகாக்கப் பட வேண்டும்;.
அலகு 43-46: உணவு மறறும் செபத்திற்கு தாமதமாக வருபவர்க்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அலகு 47: வழிபாட்டில் வாசகங்களையும் பாடல்களையும் ஒழுங்குப்படுத்த வேண்டிய பொறுப்பு மடாதிபதிக்குறியது.
அலகு 48: ஒருநாளைக்கு ஜந்து மணி நேரம் உழைக்க வேண்டும்.
அலகு 49: தவக்காலத்தில் சில ஒறுத்தல்களை செய்ய வேண்டும்.
அலகு 50-51: நிலத்தில் வேலை செய்யும் போதோ அல்லது பயணம் செய்யும் போதோ குறித்த நேரத்தில் செபிக்க வேண்டும்.
அலகு 52 : பேச்சாற்றல் நமக்கு பக்தியை வளர்க்க வேண்டும்.
அலகு 53 : விருந்தாளிகளை அன்புடன் கவனிக்க வேண்டும். அவர்களை கவனிப்பதற்கென்றே தனி நபரை நியமித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
அலகு 54 : மடாதிபதியின் உத்தரவின்றி கடிதமோ, நன்கொடைகளோ பெறக்;கூடாது.
அலகு 55 : மடாதிபதியின் உத்தரவின்படி அந்தந்த இடத்தின் தட்ப வெப்ப நிலைப்படி (உடயiஅயவந) உடை அமையவேண்டும். இரண்டு எளிமையான ந{ண்ட அங்கிகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். பழைய ஆடைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
அலகு 56: மடாதிபதி தனது விருந்தினரோடு சேர்ந்து உணவருந்த வேண்டும்.
அலகு 57: கலைப் பொருட்களை தயாரித்து அதனை குறைந்த விலைக்குச் சந்தையில் விற்;க வேண்டும்.
அலகு 58: சபையில் சேர விரும்புவோர் முதலில் விருப்ப நிலையினராக( pழளவரடயவெ) சேர்ந்து பின் நவதுறவியர்(ழெஎவையைவந); நிலைக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் அவர்கள் சபையை விட்டு செல்லலாம். பிறகு துறவிகளாக விரும்புவோர் கீழ்படிதல் வார்த்தைப்பாடு எடுக்க வேண்டும்.
அலகு 59: ஒரு சில கட்டுப்பாட்டின் க{ழ் மாணவர்களை மடத்தில் அனுமதிக்கலாம்.
அலகு 60: புதிதாக சபையில் சேர விரும்பும் குருக்கள்; முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும். மடாதிபதியின் கட்டளைப்படி தனது குருத்துவ பணிகளை செய்யலாம். அலகு 61: அறிமுகமாகாத துறவி வந்தால் அவரை நல்ல முறையில் கவனித்து கொள்ள வேண்டும்.
அலகு 62: மடத்திற்குள்ளேயே குருத்துவ அருட்பொழிவு சடங்கு நிறைவேற்றப்பட வேண்டும்.
அலகு 63: சபை துறவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து தங்களது மடாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
அலகு 64: எவரிடம் கருணையும்,அன்பும் உள்ளதோ அவரே மடாதிபதியாக தகுதிபெற்றவர்.
அலகு 66: துறவிகள் வெளிஉலகத்தோடு தொடர்பு கொள்ளாமல் தனித்து வாழ வேண்டும்.
அலகு 67: பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
அலகு 68: கடினமான வேலைகளை முழு அர்ப்பணத்துடன் செய்ய வேண்டும்.
அலகு 69: துறவிகள் ஒருவரக்கொருவர் வ{ண்வாக்குவாதம் செய்யக்கூடாது.
அலகு 70: துறவிகள் ஒருவரக்கொருவர் சண்டை போடக்கூடாது.
அலகு 71: ஒருவரக்கு ஒருவர் க{ழ்படிந்து இருக்க வேண்டும்.
அலகு 72: கருணையும், தொண்டு உள்ளமும் உடையவர்களாக இருக்க வேண்டும்.
அலகு 73: இந்த சட்டங்கள் அனைத்தும் நிறைவானது அல்ல மாறாக கடவுளை அடைவதற்க்கு தங்களையே தயார் செய்யும் துவக்க நிலையே.
முடிவுரை:
பிரச்சனைகளுக்கு அடிமையாக வாழ்ந்து, நோயால் வருந்தி, கடைசியில் சாகும் நாம், நம்முடைய வாழ்க்கையை நாமே தீர்மானிக்கும் வலிமை உடையவராக, அடிமை நிலையிலிருந்து முழு விடுதலையான நிலையை, அதாவது எந்த துன்பமும் நம்மை தாக்க முடியாத அளவுக்கு முழு விடுதலையான நிலையை அடைய ஆன்மீகம் உதவுகிறது. இந்தவகையில் ஆசிர்வாதப்பரின் ஆன்ம{க வாழ்க்கையானது நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இவரின் சபை ஒழங்குகள் இன்றளவும் பிற சபைகளில் கடைபிடிக்கப்படுகிறது. இவரின் ஆன்ம{க வாழ்க்கைக்கு உதவியாக அமைந்தது இவர் கிறிஸ்து ம{தும் அன்னையாம் திருச்சபை ம{தும் கொண்டிருந்த அளப்பறிய பற்றும் நம்பிக்கையுமே காரணம். இவரின் முன் மாதிரியைப் பின்பற்றி நானும் எனது பணிவாழ்வில் ஆன்ம{கப் பணியை ஆற்றுவேன் என்னும் உறுதி எனக்குள் பிறந்துள்ளது.இவர் சுவைத்த இயேசுவின் அன்பை நானும் சுவைத்து அதை பிறருக்கு அறிவிக்கும் ஆர்வம் எனக்கு பிறந்துள்ளது.
துணை நின்ற நூல்கள்
நூல்கள்:
1) ஆர்.எஸ். அமல்ராஜ், புனிதர்களின் பாதையில்.திண்டுக்கல்: வைகறை பதிப்பகம், 2007.
2) ஆஉ ஊயnn துரளவinஇ ளுயiவெ டீநநெனiஉவ .நேற லழசம: ஐஅயபந டீழழமளஇ1958.
இணையதளம்:
1) C.Sunder, Tamil nadu, published on 12.10.11, accessed on 15.2.12; avilable from http://shasunder.wordpress.com/2011/10; Internet.
2) J. Jeya Mohan , Tamil Nadu, published on 9.11.11, accessed on 18.2.12; avilable from http://www.jeyamohan.in/?p=21829;Internet.
3) J. Raja, Tamil Nadu, published on 10.9.11, accessed on 20.2.12; avilable from http://kaiyedu.blogspot.in/search/label/Internet.
4) William Daniel ,New York , published on1 9.12.11, accessed on 22.2.12; avilable from http://en.wikipedia.org/wiki/File:Lectio_Divina_.svg, Internet
No comments:
Post a Comment